அவளின் கம்மல்

கம்மல்
இவை
பாமரன்போல் சோகத்தில்
மிதப்பவையல்ல
பறவையைப்போல் சொர்க்கத்தில்
மிதப்பவை
பொன்னின் மதிப்பு
ஏற்றமும் இறக்கமும்
பெண்ணின் காதில்
கமலத்தின் அழகைவிட
வறுமையில்
கமலியின் காதில்
கம்மல் அழகு
கம்மலின் நடை கண்டு
காதலிப்போரும் உண்டு
கம்மலின் எடை கொண்டு
காதலிப்போரும் உண்டு
காதலனை கழற்ற
நினைப்பவள் கூட
கம்மலை கழற்ற
நினைப்பதில்லை
நகைக்கடையில்
நடுத்தர ஆண்களை
நடுங்க வைக்கும் எதிரி கம்மல்
செம்பில் கலக்கும்பொது
வலித்த கம்மலின் மனம்
களித்தது அவள்
செவியில் கலக்கும்போது
நங்கைக்கு
துளையிட்டபோது
நலிந்த மனம்
நகைத்தது அதில்
வளையிட்டபோது
நங்கை அறிவதில்லை
அவள் புன்னகையின்
மதிப்பு பொன்னகையின்
மதிப்பினும் அதிகமென்று