குருவிக் காலம்
குருவிக் காலம்
இது குருவிக் காலம்
குருவிகள் பூத்துகுலுங்கும் காலம்
இளவேனிற் காலத்தின் உச்சியில்
இலையுதிர்ந்த
நிலையறியா
தனி மரமாய்
உயர் மரங்கள்.
பட்டமரமோ!
இல்லை
பற்றற்ற மரமோ!
என நினைக்கத் துண்டும்
மரங்களுக்கு
உயிர் கொடுக்குமந்த
ஆயிரம் குருவிகள்
ஆயிரமாயிரமாய் கிறிச்சல்கள்.
இலை இழந்தது விட்டாய்
உன்னை யாம் பார்க்க மாட்டோம்
என நினைக்கத் தூண்டும்
மானுடர்களை சுண்டியிழுக்கும் அழகாய்
நீ தனித்துவிடவில்லை
உன் இலைகள் துளிரும் வரை
நாங்கள் உன்னுடன்
துணையாக இணையாக
இருக்கின்றோம்
இலையாக
இலையின் உடையாய் உனக்கு
உன் இலைகள் வந்த பின்னே
நீ வயதிற்கு வந்து
பூப்பெய்தும்போது
உன்னருகிலிருந்து
உனைபார்த்திருபோம்
என அறைகூவல் விடும்
பறைவகள்
குருவிகளின் கிறிசல்கள்.
அந்த இலையுதிர்ந்த
மரங்களைக்கூட பேசவைத்துவிடும்
ஒர் விந்தை.
அந்தை குருவிகளின்
சப்தம்
ஒராயிரம் பிறக்கும் குழந்தைகளின்
உற்ச்சாகத்தை உண்ர்த்தும்
நமக்கும் ஒரு
உத்வேகம் பிறக்கும்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
