அழகி

முட்களுக்கிடையில்
மெல்ல மெல்ல
இதழ் விரித்தேன் !
முழுதும் மலர்ந்தவுடன்
முகங்காண விழைந்தேன் !
நதிக் கண்ணாடியில்
வளைந்து குனிந்து பார்த்தேன் !
வண்ணத்தையும்
வடிவழகையும் ரசித்தேன் !
ஆம் ....!
எல்லோரும் சொல்வதுபோல்
நான் அழகி ....
இயற்கை ஈன்ற
பேரழகி !

எழுதியவர் : ராஜ லட்சுமி (3-Aug-15, 2:13 pm)
Tanglish : azhagi
பார்வை : 225

மேலே