பள்ளிக்கூடங்கள்
பள்ளிக்கூடங்கள்
மூட்டை மூட்டையாய் பாடங்கள்
மற்றவர்கள் சிந்த்துச் சென்ற சிந்தனைகள்
பலப் பலப் புது பாடங்கள்
தகவல் மூட்டைகள்
பணம் தரும் பாடங்கள்.
பயன் தரும் என்றெண்ணி
பச்சிலம் சிங்கங்கள்
பயின்று பயின்று சலிப்படைந்தவைகள்.
கற்பனைக்கும் சுயசிந்தனைக்கும்
இடம்தரா இடங்கள்.
மாற்று சிந்தனை
தவறென நினைக்கின்ற பாடத்திட்டங்கள்.
கற்றல் கற்றல் போய்
தினித்தல் தினித்தல்.
கேள்விகள் போய்
பதில்கள் மட்டுமே வேண்டும் இடங்கள்.
'கல்வி' போய்
தகவல்களின் உறைவிடங்கள்.
தைரியம் தொலைந்து,
வீரியம் உழைந்து,
நிமிர்ந்து நிற்பது போய்,
குனிந்து குனிந்து
கூணிக் குறுகும் இடங்கள்.