ஏப்ரல் மாத மதியம்
ஏப்ரல் மாத மதியம்
ஓர் ஏப்ரல் மாத மதியம்
அந்தி கருக்கல்
வேணிற்காலத் தொடக்கம்
இலையுதிர்ந்த மரங்கள் .
ஏதோ தொலைத்த ஓர் நிலை.
இல்லை இல்லை
வேண்டாததை
விட்டுத் தொலைத்த ஓர் உணர்வு,
துறவு நிலை.
இல்லை இல்லை
காலச் சுழற்சியின் குத்தல்கள்.
உயர்ந்த மரங்கள்
இலையுதிர்ந்த நிலை.
அதைக் கண்டு சிரிக்கும்
சிறிய கொடிவகைகள்.
புரியவில்லை
உச்சத்தைப பார்த்து
படுத்திருந்தவனுக்கும்
அதே நிலை.
தன்னை மறந்து
தன்னினுள்ள இலைகளை
உதிர்க்க
தனைத் துறக்க முடியவில்லை.
புதிது புதிதாய் இலைகள்
கொழுந்துகள்
முளைத்து முளைத்து
அந்த முதிர்ந்த இலை
தளர்ந்து விழுமுன்
அந்தச் சுடுசூரியனை
பிரதி பலிக்க,
உயந்த பார்வை விழியின்
சின்ன சின்னதாய்
விளிம்புகளில்
சின்ன சின்னதாய்
காணல் நீர்களின் ஓட்டம்.
இலைகள் உதிரவில்லை.
காணல் நீர் இலைகள் துளிர்த்தன.