காதல் வானில் -நானும் பறக்கிறேனடி-உன்னைத்தேடி

சிட்டுக் குருவியும்
பறந்ததடி சின்னஞ்சிறு
பூக்களை தேடி

வண்ணக் கிளியும்
பறந்ததடி வான்
நிலவைத் தேடி

பட்டாம் பூச்சியும்
பறந்ததடி பனி
மலரைத் தேடி

மின்மினி பூச்சியும்
பறந்ததடி அந்தி
இருளைத் தேடி

கருங்குயிலின் அழகே
கண் சிமிட்டும் விழியே
கானகத்தின் இசையே

காதல் வானில்
நானும் பறக்கிறேனடி
உன்னைத் தேடி

எழுதியவர் : கவி ஆறுமுகம் (4-Aug-15, 3:11 pm)
சேர்த்தது : கவியாருமுகம்
பார்வை : 78

மேலே