புரிந்தும் புரியாததுதான் காதலோ 555

உயிரானவளே...
நித்தம் நான் உன்னை
தொடர்கிறேன்...
என் நித்திரையிலும்
நீயே வருகிறாய்...
கடிதம் கொண்டு வந்தால்
கண் உயர்த்தி பார்க்கிறாய்...
மலரோடு நான் வந்தால் தலை
கவிழ்ந்து மண்ணை பார்க்கிறாய்...
கைவீசி நான் வந்தால்
நீ வேகமாக செல்கிறாய்...
ஓடிவந்து வழி மரித்தால்
நீ வானத்தை பார்க்கிறாய்...
மெல்ல நான் நடை
போட்டால்...
நீ அங்கங்கே நின்று
பார்க்கிறாய் திரும்பி...
என் காதலை புரிந்துக்கொண்டு
என்னை அலைய வைக்கிறாயா...
இல்லை புரியாமலே தொடர
வைக்கிறாயா சொல்லடி...
இதுதான் காதலோ...
புரிந்தும் புரியாமலே
இருப்பது.....