மனசு வலிக்குதடா

கண்ணதாசன் ........
நானில்லை -உனக்கு
கவிதை புகாழ்பட

வைரமுத்து ............
நானில்லை -உனக்கு
வாழ்த்தி கவிபாட

சாதாரண ............
மனிதனாக -என்
சஞ்சலத்தை
சொல்லவந்தேன்

உனக்கும் எனக்கும்
உறவுகள் ......ஏதுமில்லை
உன்னை ........
ஒருதடவைகூட
பார்த்ததில்லை

இருந்தும் .....மனசு
வலிக்குதையா
மரணசெய்தி கேட்டு

கண்கள் ஓரமாய்
வடிந்த கண்ணீருக்கு
வாய்க்கள் போட
முடியவில்லை ....

ஒரு கட்சி தலைவனுக்கு
கூடாத மக்கள்
கூட்டம்.....
ஒரு கடைகோடி
தமிழனுக்கு எப்படி ?
கூடியெது

எதிரியின் ஏவுகணை
தாய் மண்ணை தொடுமுன்னே .......
தடுத்து நிறுத்திய நீ
உன் உயிரை எடுக்க வந்த
எமதூதனை தடுக்க
நினைக்க வில்லை

நீ ......தன்னலமற்றவர்
என்பதலா? தொடரும்

எழுதியவர் : இரா .மாயா (4-Aug-15, 3:57 pm)
சேர்த்தது : மன்னை மாயா
பார்வை : 91

மேலே