கஜல்- 9

கண்ணால் மின்னல் கவிதை சொல்ல வா
என்னை அதிலே பொருளாய் பின்ன வா

உன்னால் ஏதோ மகிமை வந்ததே
இன்பம் எந்தன் மனதில் பெய்ய வா

வாழ்வில் உண்மை இனிமை கூடவே
நெஞ்சில் மிஞ்சும் அன்பை அள்ள வா

எண்ணம் எங்கும் புதுமை பொங்குதே
நாளும் வாட்டும் துயரை வெல்ல வா

வேண்டாம் வெண்டாம் இனிமேல் கேள்விகள்
காதல் வெள்ளம் மதியில் துள்ள வா

எழுதியவர் : ரோச்சிஷ்மான் (4-Aug-15, 4:04 pm)
பார்வை : 65

மேலே