ஸ்ரீச்சிராப்பள்ளி

1979 ஆண்டு தாவரவியல் பேராசிரியர் ஒருவர் "ஸ்ரீபதி"யைத் தான் திருப்பதி என்று "மாற்றிவிட்டார்கள்" என்று கூறி ஆதங்கப்பட்டார்.


அவர் கூற்றுப்படி:

ஸ்ரீச்சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி
ஸ்ரீச்சிற்றமபலம் திருச்சிற்றம்பலம்

ஸ்ரீவாரூர் திருவாரூர்


ஸ்ரீமங்கலம் திருமங்கலம்

ஸ்ரீமங்கையாழ்வார் திருமங்கையாழ்வார்


ஸ்ரீஅனந்தபுரம் திருவனந்தபுரம்


ஸ்ரீநகர் திருநகர்


ஸ்ரீநாவலூர் திருநாவலூர்


ஸ்ரீஆன்மீயூர் திருவான்மியூர்

ஸ்ரீகுறள் திருக்குறள்
ஸ்ரீவள்ளுவர் திருவள்ளுவர்
ஸ்ரீஅருட்பா திருவருட்பா

ஸ்ரீமந்திரம் திருமந்திரம்

------ என்று மாறியிருக்கலாம் அல்லவா?

இவரைப் போன்ற படித்த மேதாவிகள் தான் தமிழைச சீரழித்து வருகிறார்கள். ஊடகங்களைப் பயன்படுத்தி தமிழைச் சீரழிக்கும் வேலை தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது. பரிமாற்கலைஞர், மறைமலை அடிகள், திரு.வி.க போன்ற தமிழறிஞர்களின் உழைப்பைக் கற்றவர்களே உணரவில்லை. அதன் பயனே இன்று கல்வியறிவு இல்லாத கிராம மக்களும் கலப்படத் தமிழ் பேசும் நிலை. படித்தவர்களே தம் பிள்ளைகளுக்கு தமிழ்ப் பெயர்களைச் சூட்ட வெட்கப்படும் போது சினிமா கிரிக்கெட் தொலைக் காடசித் தொடர் போதைகளில் மயங்கிக்கிடப்போரை யார் மாற்ற முடியும்?

எழுதியவர் : மலர் (5-Aug-15, 8:30 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 142

மேலே