காதல் வெண்பா

மடிகிடத்தி ராதையுடன் மையலில் வீழ்ந்தாய்
துடியிடையாள் கண்நோக்கத் தூக்கம் தொலைத்தாய்
வடிவழகில் தன்னை மறந்தே லயித்தாய்
விடியுமுன்னர் மெல்லிசை மீட்டு .


( ஒரு விகற்ப இன்னிசை வெண்பா)

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (5-Aug-15, 10:26 pm)
பார்வை : 99

மேலே