மனஅவசங்கள்

*
மௌனமாய் இருப்பதாகத் தெரிகிறது
பரந்த வெளியெங்கும் சூழ்ந்திருக்கும்
மனஅவசங்கள் தோற்றத்தில் உள்ளதைச்
சற்றே வெளியேற்ற வழிதேடுகிறது மனம்.
அவரவர்களுக்குள்ளேயே பகிர்ந்து
வெளியில் சொல்ல இயலாது உள்ளே
தீயெனப் பற்றி எரியும் பிரச்சினைகள்
எங்கும் ஓயாதப் போராட்டங்கள்
ஆர்ப்பாட்டங்கள் உண்ணாநோன்புகள்
நிகழ்த்திய வண்ணமாய் ஊழியர்கள்.
பொதுமக்கள் என்றேனும் தீர்வுக்
காணலாமென்றக் கனவுகளோடு
வாழ்ந்துக் கழிக்கின்றனர்
நாள்தோறும் தகவல்கள் எதிர்ப்பார்த்து
உட்கார வைத்திருக்கிறது ஊடகங்கள்.
பேச்சு வார்த்தைத் தோல்வியென்றத்
தலைப்புச் செய்தியோடு முடிந்தது
இன்றொரு நாள்….!!
*

எழுதியவர் : ந.க.துறைவன் (6-Aug-15, 9:32 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 76

மேலே