பள்ளி பருவங்கள் ..............

நட்புடன் ........
நடந்து சென்றாலும் ..
நடை பாதையில் ...
நந்தவனமாய் .......
பூத்து இருந்தோம் ........

நாலு மையில் ஆனாலும்.....
நடை வலி தெரியாமல் ...
ஆடி பாடியே சென்றோம் ......

சுட்டு எரிக்கும் ...
வெயில்லும் மழையாய்...
கொட்டி தீர்த்த ...
நண்பர்களின் அன்பு ......

எட்டி எட்டி பறித்த..
எட்டாத சாலை ஓர .....
புளிய மர காய்களாகவே ....
எத்தனையோ ஏக்கங்கள் .........

பள்ளி புத்தக பையோடு .....
நம் நட்பையும் ...
சேர்த்து வைத்து .....
சுமக்கிறோம் .....

மாதம் ஒரு தேர்வு ...
ஆசிரியருக்கோ திருவிழா ........
எங்களுக்கோ மறக்க முடியாத ....
ஒரு விழா.........

ஆசிரியரோ பரம்பு வாத்தியங்கள் ....
இசைக்க இசைக்கு ஏற்ப .....
நாங்களோ! அம்மா என்றே .....
இராகங்கள் பாடினோம் ........

வருடங்கள் ஓடின ......
உன் வாசலும் என் வாசலும் ......
அறியாமலே ........
வயது மட்டுமே ...
வணக்கம் சொல்கிறது .....

நம் நட்புக்கு நாற்பது ......
வயது என்று ......

நம்ப முடியவில்லை ......
நம் பிள்ளைகள் வந்து விட்டதை ........
நாலு வயது பிள்ளை போலவே ....
நினைத்து கொண்டு இருக்கிறேன் ....

நித்தம் நனையும் உன் நினைவுகளில் .....
நீங்காமல் பூத்து நிற்கிறேன் ..........
நம் நினைவுகள் ஆவது ..........
நம்மை சேர்க்கட்டும் என்றே ????????
நீங்களும் நினைப்பீர்கள் என்றே ?????

எழுதியவர் : நிஷா (21-May-11, 12:24 pm)
பார்வை : 1352

மேலே