இளைஞர்கள் இனி உங்கள் கையில் தான்
இளைஞர்கள் இனி உங்கள் கையில் தான்
இந்த நாட்டின் எதிர்காலம்
ஏனெனில் இது தான் இந்தியாவின்
இலையுதிர் காலம்;
பட்டுப்போன பல மரங்கள் பாலை எண்ணத்தில்
பரிந்தும் புரிந்தும் பார்வை வீசுகின்றன,
இந்த இளைஞர்கள் என்னவாவோர்களொ
என்று விழுதுகள் சில வினவ,
தலைமுறை இடைவெளி சுருங்கி கொண்டு
இருக்கும் காலமிது; தர்க்க சிந்தனைக்கு
தீர்வு தேடும் நேரமிது!
பணக்கார நாடுகளை பார்த்து
பாடம் கற்றுக்கொண்டு
இந்த நாட்டுக்கு எது சாத்தியமோ
அதை சாதிக்க துணிவோம்!
செல்வ செழிப்புடைய நாட்டின்
அடையாளங்கள் ஆளுடைமை நிறுவனங்களும்,
மேம்பட்ட கலாச்சாரமும்
இயற்கை வளங்களுமே!
இவையெல்லாம் இந்தியாவில் இல்லையா?
எண்ணெய் வளம் இந்தியக்கடலில் ஏராளம்,
தோண்டிய கிணறுகள் தனியாருக்கு தாரை வார்த்த
அரசு கொள்கையை மாற்றிட வேண்டும்; அல்லது
புதிய கிணறுகள் தோண்டப்பட வேண்டும்.
வளங்கள் என்றுமே அரசுவசம் என்பது தானே முறை.
அதை விடுத்து உள்ளுர் நிலங்களை கையகப்படுத்த
இன்று ஏன் மல்லுக்கு நிற்க வேண்டும்?
தனியார் நிறுவனங்கள் என்ன வானத்திலிருந்தா
குதித்து விட்டன? அரசு ஏன் ஆரத்தி எடுக்கிறது?
நிர்வாகம் சரியானால் பொதுத்துறை நிறுவனங்களும்
பொறுப்புடன் செயல்படும்.
ஆங்கிலேய சட்டம் நம்மை ஆட்டிப்படைக்கிறது
சட்டம் மாற்றுவதில் இருந்து
சலுகை கொடுப்பது வரை
தனியாருக்கு கொடுக்கப்படும் அந்தஸ்து
அரசு நிறுவனமும் பெற வேண்டும்;
உழைக்கும் வர்க்கம் ஒத்துழைத்தால்
பொறுப்புடன் இளைஞர்கள்
பணியாற்றிட வகை செய்வோம்!
அரசு நிறுவனங்களும் இன்றைய
தனியார் நிறுவனம் போல் இயங்குமாயின்
அந்நிய முதலீடு அரசு நிறுவனத்திற்கும்
வந்து சேரும். அப்புறம் என்ன,
இந்தியாவை கண்டு சீனாவும் நடுங்கும்.
அரசு இயந்திரம் முடக்கப்பட்டு
ஆண்டுகள் ஆகி விட்டன;
அரசியல் பரமபத சோபணங்களால்
கொள்கைகள் கொள்ளை அடிக்க மட்டுமே
இருந்த காலம் மாறட்டும்
மூடிக்கிடக்கும் நிலக்கரி மற்றும்
தாது சுரங்கங்கள் இயங்கினால்
போதுமே எரி சக்தியும்
மூலப்பொருளும் ஏன் கிடைக்காது?
கதர்பட்டு காட்டன் சட்டையில்
உலா வரும் கூட்டம்
வேலை நிறைய இருந்தும்
வேலை செய்யாமல்
வேலை வாங்கும் திறன் இல்லாமல்
அரசு இயந்திரத்தை முடக்கி வைத்து
இருப்பது இளைஞர்களே உணருங்கள்
ஆக்கப் பூர்வமாக செயலாற்ற வேண்டிய
நீங்கள் ஏன் பட்டம் பெற்றும்
காத்து கிடக்கிறீர்கள்
அரசு வேலைக்காக காத்திருந்தால்
ஆயுசு முடிந்து விடும்,
தனியார் வேலையில் என்ன
உச்சம் அடைந்து விடுவீர்கள்?
சுயத் தொழில் தொடங்குங்கள்
கூட்டு வியாபாரம் அல்லது
கூட்டுத் தொழில் செய்து
உங்கள் திறமை. காட்டுங்கள்
எதிர் காலம் மாறும் போது
நீங்களும் ஒரு அரசு நிறுவன
உயர் அதிகாரி ஆகலாம்,
நாட்டிற்கு நன்மை செய்யலாம்;
அது வரை உங்களை
நீங்கள் அடையாளம் காணுங்கள்,
அதன் பின் அடையாளம் காட்டுங்கள்!.