சோக கீதங்கள் -ரகு
உணர்வுகளின்
ஒரு துளி காயங்களுக்கு
மருந்தாவன என்பதால் தான்
இந்த கீதம்
இசைக்கும் திசைகளில்
நின்று கணக்கிறோம்
சுழலும் பூமிக்குள்
சுழலாதோர் நாமெனும்
கர்வ நரம்புகளில்
உங்கள் சுழற்சியாவன
சோகங்கள் என
உணர்த்தும் காலங்களில்
இவ்விசை தன்
மகத்துவ மேவி நிற்கும்
ஒற்றை மரத்தில்
ஊர்த்துவமிட்டுப் பாடித் திரியும்
தனித்த குயிலின்
சோக இசைக்குள்ளும்
சிறகுகள் உதிர்க்கும்
மனத்தின் மௌன நீட்சிகள்
எந்திர வாழ்க்கையையும்
மணித்துளிகள் நிறுத்தி,
இடரேற்றும்,
இழப்புகளுக்குத் தீர்வுகள்
சோக இசைகளானது..!
தொடர்ந்து
நிழல் சூழ்ந்த பயணத்தில்
கிடைக்கும்
ஒற்றை வெயில்
எப்படி சுகமானதோ
அப்படியானது
வாழ்வில்
சோக கீதங்கள் ......!