இரவுப்பொழுதில் ~~ அர்ஷத்

விண்மீன் கதையை உன் விழிமீன் கேட்க
நிலவை நீ ரசிக்கும் அழகை நான் ரசிக்க...!!!

சூடும் மலரும் சூடேற்றும் விரலும்
விடிய வரையில் இரவை வரைய
இருளில் விழுந்து ஒழுக்கம் கரைய...!!!

சுகம் கூடிடும் நகமும்
அகம் காட்டும் முகமும்
சேரும் போது தயக்கம் நிலவ
இரு உயிரும் நிலவில் உலவ ....!!!

தென்றலாய் தவள்கிறாள் அழகான தேவதை
இதழ்களில் மிதக்கிறாள் வாய் கொண்ட தாமரை
இரவின் பொலிவும் இவளின் நெளிவும் அதிசயம்
இரவும் கவியும் என்றுமே ரகசியம் ....!!!

எழுதியவர் : அர்ஷத் (8-Aug-15, 11:44 am)
பார்வை : 109

மேலே