நண்பேன்டா

குணா: ஏண்டா சோகமா இருக்க?
ரகு :என் மனைவி எப்ப பார்த்தாலும் எங்கிட்ட சண்டைக்கு வராடா. அதான் எப்படியாவது அவளிடம் நல்ல
பேரு வாங்க அவளுக்கு பிடிச்ச டீ போட்டு கொடுத்து அசத்தனும். அதுக்கு நீ தான்டா உதவி
செய்யணும்.
குணா: என்னடா பண்ணனும்? என்ன பண்ணனும்? கடைல டீ வாங்கிட்டு வரணுமா? தயங்காம கேளுடா.
ரகு : அதெல்லாம் இல்ல.எனக்கு டீ போட சொல்லி தாடா.
குணா: இதெல்லாம் ஒரு விசயமா. ஒரு பேப்பர் பேனா எடுத்துக்க.. சொல்றத குறிப்பு எடுத்துக்க.
(ரகு பேப்பர், பேனா எடுத்துக்கொள்கிறான்)கிடைமட்டமா ஒரு கோடு போட்டு அதன் நடுவில இருந்து கீழ்நோக்கி ஒரு செங்குத்தா ஒரு கோடு போடு.. ( T ) இது தான் டீ. அவ்வளவுதான்டா விஷயம்.ஆனா மாப்ள கிரீன் டீ தான் நல்லதுன்னு சொல்றாங்க அதனால கிரீன் கலர் பேனால இனிமேல் டீ போடு..சரியா..
ரகு :???