நான் பசு பேசுகிறேன்

கொலைகார மனிதா -
உனக்காக பசுவின் நினைவூட்டல் கவிதை இது ,
உன்தாய் உன் ஒருவனுக்குதான் தாய்
நான் ஊருக்கெல்லாம் தாய் ...........
ஊருக்கு பசியாற்றி
என் உதிரமே வற்றிவிட்டது -
இருந்தும் காலத்திற்கும்
கருணை உள்ளவலாகவே .............
என் கன்றுகளின் வயிறு
காய்ந்து கிடந்தாலும்
உன் பிள்ளைகளின் வயிற்றை
என்றைக்கும் ஏமாற்றியதில்லை ........
கிடைத்ததை தின்று
தெருவிலே நின்றாலும்
உன் அறுசுவை உணவில்
அத்தனையிலும் என் பங்கு ..............
கோமாதாவாய்
குலமாதாவாய் இருந்தபொழுதிலும்
என்னை கொலைசெய்யும் போக்கு மட்டும்
ஏன் இன்னும் மாறவில்லை ...........
உன் உடம்பிலே ஓடும் உதிரத்தில்
கலந்துள்ள என் உதிரத்தின்
விசுவாச உணர்வுகூடவா
உன்னை தடுக்கவில்லை .............
பால் சுரந்தும்
நீ என்மேல் பாவப்பட்ட
வரலாறுகள் இன்றைக்கும் இல்லை .............
பொருளாதார பங்களிப்பில்
என் பங்கு போதவில்லையோ என்னவோ
இறுதியிலும் என்னை விற்று
பணம் பார்த்து பாவியாகிறாய் ..........
அர்ப்பணித்து வாழும்
எங்களின் வாழ்க்கைக்கு
அடிமாட்டு கூடாரமே
இறுதி இடமாகிறது ...........
மிருகங்களிடம் இருக்கும்
விசுவாசம் கூட
மனிதா உன்னிடம்
இல்லாமல் போய்விட்டது ...........
பெற்ற தாயே பெரிதாய் தெரியாத உனக்கு
மற்றவை எல்லாமே
மாமிசம்தான் ..........
கடவுளாய் பார்க்கும்
உயர்ந்த இடத்தில் ஆசையில்லை
என்னை ஓர் உயிராய் மட்டும் பார் -
வலி எல்லா உயிர்க்கும் பொதுவே .........