நம்மைப் பற்றி...

கருவறையில் இருந்து எட்டிப் பார்த்த
குழந்தைகள் இங்கே கவிதைகள் எழுதுகின்றன...

ஆளாகி வளர்ந்து விட்டோம்
ஆசைத் தீயை வளர்த்து விட்டோம்
ஆணி வேறாக நம் மனதினை
அள்ளி அணைப்பது கவிதை இங்கு...

அன்றொரு நாள் மிட்டாய்க்கு அழுது
பின்னும் சில மதிப்பெண் வேண்டி
அதற்கு மேலும் பெண், ஆணென்று
அலைந்து திரிந்து ஆர்ப்பாட்டம் செய்து,

அக்கறையோடு சில சமூக சிந்தனைகள்
அதிலும் பல செய்திகளைச் சேகரித்து
கவிதைகளைக் கொட்டித் தீர்த்து
கல்வியாலே கருத்துக்கள் செய்வோம்...

காலை முதல் மாலை வரை
காணுகின்ற காட்சி எல்லாம்
கவிதையாக வந்திங்கு
குவித்ததற்கு என் நன்றி...

எழுதியவர் : shruthi (21-May-11, 4:40 pm)
சேர்த்தது : shruthi
Tanglish : nammaaip patri
பார்வை : 478

மேலே