கடவுளைதேடும் பயணத்தில் - 1

பாறையை சிதைத்து பக்குவமாய் வடித்து
உளிகளின் உரசல்களில்
உயிர்ப்பெருகிறது கடவுளின் அவதாரம் .

மதங்கள் மாறுபடலாம்
மார்க்கங்களும் மாறுபடலாம்
ஆனால் அடிப்படை ?

கடவுளை தேடும் புனித பயணத்தில்
நம் முன்னோர்கள் படிப்படியாய் புதைத்து சென்ற
அடிப்படை சூழ்சமங்களை
ஆராய தொடங்குவோமே .

காலத்தில் மாற்றத்தில்
மனிதனின் அடையாளங்களை
மறந்தே வாழ்ந்து வந்திருக்கிறது
நம் மரபு சமுதாயம் .

எதிர்பார்ப்புகள் எவ்வளவோ இருந்தும்,
அதற்க்கான அடிப்படைகள் இருக்கும் என்பது
ஏற்பு உடையது தானே .

மனிதனாய் பிறந்தும்
மனிதனை நேசிக்க தெரியாத மனிதன்
எப்படி கடவுளை காண்பது
சாத்தியமாகும் .

மனிதனை வெறுக்கும் மனிதனை
கடவுள் எப்படி
கருணையோடு அணுகுவார் .

தர்மமும் நியாயமும் நீதியும்
மனிதத்தின் அடிப்படை வாழ்க்கை முறைகளாக இருக்கும் பட்சத்தில்
இவற்றை மறந்து வாழும் மனிதனுக்கு
கடவுள் கடாக்ஷம் எப்படி கிடைக்கும் ?

கற்றது கைய்யளவு என்பது மறந்து
எல்லாம் அறிந்தவன் நான் என்று
தம்பட்டம் அடித்து தலைக்கனத்தில் வாழும் மனிதனில்
கடவுள் எப்படி கால் பதிப்பார் ?

இரக்கமும் கருணையும் அன்பும்
கடவுளின் எதிர்ப்பர்ப்பாய் இருக்கும் மனிதனில்
ஏகப்பட்ட சாக்கடைகள் கழிவுகள் நிறைந்திருக்கும் மனிதன்
கடவுளை தேடும் பயணத்தில் வெற்றி சாத்தியமாகுமா ?

கடவுளை தேடும் பயணம் தொடரும் ..................

கவிஞர் சுந்தர வினாயகமுருகன் , புதுவை

எழுதியவர் : வினாயகமுருகன் (11-Aug-15, 9:45 am)
பார்வை : 70

மேலே