இழந்த நம்மூதாதை அறிவுச்செல்வம் இன்னுந்தான் நமது கைக்கெட்டவில்லை 3 -முஹம்மத் ஸர்பான்

குருடனாக செவிடனாக ஊமையாக
பிறந்திருக்கலாமே!என்று நினைத்து
ஏது பலன்..பாழ்நிலத்தில் விளைந்த
பயிரை போல் கேடுகெட்ட இப்பூமியில்
நிலைத்திருந்து கண்ணெதிரே நடக்கும்
கொடுமைகளை மறந்து வாழ்வது தானே!!
நீ கற்ற ஞானம் சொல்லித்தந்த விழுமியமா?

முஹம்மத் புத்தர் ஈஸா இராமன் என்று
காக்குதற்குதித்த வள்ளல்கள் தடம்பதித்த
இம்மண்ணில் நீதி என்றது - மாசியில் மறைந்த
மதியின் துலக்கம் போல் ஓடி ஒழிந்து விட்டதே!
கல்வி நிலைத்திருந்தும் நாம் உயரற்ற வெறும் ஜடங்களே!

திருக்குர்ஆன் திருக்குறள் சொல்லாத விழுமியமோ?
வழி காட்டாத நேர்வழியோ...உண்டோ?
ஏழு சமுத்திரங்களை மையாகவும்;மரங்களை
எழுத்தானியாகவும்;மண்ணை எழுது ஓலையாகவும்
கொண்டு இது போன்ற இலக்கிய முத்துக்களை நெய்ய முடியுமோ?
ஞானம் பெற இவற்றை ஓரிரு பக்கம் புரட்டு நீ
ஏழெட்டு ஜன்மமும் ஈடேற்ற மறைவாய்..........

என்றும் அழியாதிருக்கும் எம் மூதாதையின்
அறிவை பெற அவர்கள் நடந்த பாதைகளில்
நாமும் பதம் பதித்து செல்ல கை கோர்ப்போம்...!!

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (11-Aug-15, 9:15 am)
பார்வை : 93

மேலே