சொந்தமாக ஒரு தொழில் - பகுதி மூன்று

பள்ளிப்படிப்பு போதும், பட்டப்படிப்பு
வேண்டுமானால் கல்லூரிக்கு செல்லாதே
தொலை தொடர்பு போதும் உன்
படிப்பை நீ தொடர!

கல்வி இன்று எங்கும் காசாக்கும் கருவியானது
கற்றுத்தர இன்று வழிவகை இங்கு ஏராளம்!
பாடங்கள் இன்று போதிக்கப்படும் முறையும்
முறையின்றி போனது சுயமாய் கற்கும் காலமானது

கல்லூரிக்கு சென்றால் காசும்
காலமும் விரய மாகிறது,
கண்டவர் கேட்டவர் கடிந்து
சொல்ல தெளிந்தால் நன்மை

சுயமாய் கற்க வாய்ப்பும் வசதியும் இங்கு
ஏராளம். ஏட்டுக்கல்வி செய்யாததை இனி
பயிற்சி பெற்று முயற்சி எடுத்தால்
எட்டலாம் புதிய உச்சம்

எக்கச்சக்கமாய் என்ஜினியரிங் படித்து
பரிதவிப்பவர் இன்று ஏராளம்
சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு
சாயங்காலமானது எதிர்காலம்

அப்டேசன் மட்டுமே இனி ஆஃப்ஸொர்
உள்ளுரில் பைரஸியின் உற்சவம்
இன்னுமொரு இண்பொஸிஸ்க்கு
இந்தியாவில் வாய்ப்பில்லை

உலக அரங்கில் அன்னிய செலாவணி
ஈட்டுவதே இன்றைய நிலையில் போட்டி,
உள்ளூர் பட்ஜெட் உதவாத போது
உலக வங்கி கடனை எப்படி அடைக்க?

ஜப்பான் போன்று ஏற்றுமதி செய்தால்
இலக்கை அடைய ஏதுவாகும்
உற்பத்தி செய்து பொருளை ஈட்ட
சிறு சிறு நிறுவனங்கள் தேவை

பெரிய நிறுவனங்களுக்கு உற்ற துணையாக
அத்தகு சிறு நிறுவனங்களும் உதவலாம்
என்ஜினியரிங் படிப்பும் ஏற்ற பயிற்சியும்
இனி ஒரு புதிய வழித்தடம்

ஏற்றத்திற்கு ஒரு ஏணி எடுப்போம்
மாற்றத்திற்கு ஒரு வகை செய்வோம்
ஆட்டோமொபைல் முதல் அத்தனயும்
இந்தியாவில் உற்பத்தி செய்யலாம்

(தொடங்கும்)

எழுதியவர் : செல்வமணி (11-Aug-15, 12:51 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 153

மேலே