இயந்திரமான மனிதன்

சுகந்திரம்:
முதுமையின் பொருளாதார சுகந்திரத்திர்காக, இளமையின் மற்ற சுகந்திரத்தை அடிமை சாசனம் எழதித்தர ஆயத்தம் ஆனான்.
*************
உழைப்பு:
நேற்றைய மனிதன் உழைப்பை குறைக்க இயந்திரம் கண்டுபிடித்தான்!
இன்று மனிதன் விரலுக்கு மட்டுமே உழைக்க கற்றுக் கொடுத்தான்!
*************
தாய் மொழி:
இயந்திரத்துடன் அதன் தாய் மொழியில் (binary language) உரையாட தெரிந்த மனிதன்,
தன் தாய் மொழியை ஏனோ மரந்து போனான்.
*************
ஈரமற்ற இதயம்:
இதயம் என்பது இயந்திரம் அல்ல ஈரத்தை நீக்க!
நீக்கியதால் முப்பது வயதில் மாரடைப்பில் படுத்தான்.
*************
அ Vs ஆ:
அத்யாவசியம் என்பது நீர்!
ஆடம்பரம் என்பது விஷம்!
நீரில் விஷம் கலந்ததால்,
ஆடம்பரமே அத்யாவசியம் ஆனது.