என் காதலின் முறிவு

ஒரு பூ
செடியில் இருந்து
தன்னை விடுவித்துக்கொண்டு
உதிர்வதைப் போலதான்
அன்று நீ
திரும்பி நடந்தாய்......
எத்தனை முத்தங்கள்
எத்தனை கடிதங்கள்
எவ்வளவு காமம்
எவ்வளவு காதல்
அத்தனையும் சுருட்டிக்கொண்டு
திரும்பி நடந்தாய்......
ஒவ்வொரு முறையும்
நீ உள்ளே செல்லும் முன்
திரும்பிப் பார்ப்பது
வழக்கம் எனவும்
அதுவரை நான்
காத்திருந்ததில்லை என்பதும்
உன் செல்லச்சண்டைகளில் ஒன்று
அன்று நின்றெருந்தேன்.....
தாமதமாய்த்தான் உன்
அறையின் கதவு
திறக்கப்பட்டது
திறந்தநொடியில்
சரேலென உட்புகுந்து
மறைந்து போனாய்......
ஆம்
அதன்பிறகு
உன் சுவடில்லை
நீ
ஒருமுறை
திரும்பி இருக்கலாம்......
நம் காதல்
வாழ்ந்திருக்கும்....!

எழுதியவர் : Kavin (11-Aug-15, 3:48 pm)
பார்வை : 216

மேலே