பார்வையின் அர்த்தங்கள்

பார்வையின் அர்த்தங்கள்

மனிதனே
உன்
பிறவியில்
பார்வையில்

எத்தனை அர்த்தங்கள் ?

நாம் சூரியனுக்கு காலையில் மண்டியிடும்போது
செடிகளும் கொடிகளும் நிமிர்ந்து நிற்கின்றன

சேவலும் ஆந்தையும்
பொறுப்பு மாற்றிக்கொள்கின்றன

கண்களும் இரவும்
கைக்கூப்பி கொள்கிறது

குழந்தை ஒன்று பாலுக்கு தவிக்க
கன்று ஒன்று தன் பங்கென்று நினைக்க

கனவுகளில் வெளிச்சம்
கொண்டுவர சூரியன் எழும்பும்

செடிகளும் மனிதனும்
மூச்சுப் பரிமாற்றம் செய்ய

மூச்சுக்கயிற்றை கொண்டு
சூரியன் எழும்பும்

வாசலில் கோலம் போட
வரிசையில் எறும்புக் கூட்டம் நிற்க

வெளுக்கிறது இரவு
வெளிவருகிறது சிவப்பு

நகர்கிறது இருட்டு
நடனம் ஆடுகிறது கருப்பு

உச்சி கொள்ளும்போது
நீ வெட்கம் கொள்ளவைப்பாய்

உச்சி சாயும்போது
நீ ஏக்கம் காணவைப்பாய்

குழந்தையின் உணவுக்கு
தாயை காக்கவைப்பாய்

குழந்தையின் வருகைக்கு
உன்னைக்காணவைப்பாய்

பெண்களின் பயத்திற்கு
இருட்டும் நீயே

ஆண்களின் கூத்திற்கு
காரணமும் நீயே

ஆண்களின் தூக்கத்திற்கு
காலையும் நீயே

பெண்களின் தைரியத்திற்கு
கோலமான காலைவேளையும் நீயே

தசைகளை அசைக்கும்
காற்றும் நீயே

இலைகளை உணரவைக்கும்
தாவரமும் நீயே

பூமியை நகரவைக்கும்
புத்துணர்ச்சி நீயே

பூமியை சுழலவைக்கும்
கண்காட்சி நீயே

என் கண் இமையின்
கதாநாயகனே

நான் உன்னைக்
காண பாக்கியம் செய்திருக்கவேண்டும்

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (11-Aug-15, 6:16 pm)
பார்வை : 217

மேலே