உன் நினைவில் செத்துக்கொண்டு இருக்கிறேன் 555

பெண்ணே...

நீ கொடுக்கும் காதல்
வலியைவிட...

கதிரவனின் வெப்பம் என்னை
சுட்டெரிக்கவில்லையடி...

அதோ அந்த கதிரவனின் உச்சத்தில்
என்னை நீ தூக்கிலிட்டாலும்...

என் ஜீவன் மரிப்பது
கடினம்தானடி...

காதலுக்காக உயிர்
கொடுப்பாயா என்றாயடி...

உன்னை என் எதிரில் பார்க்கும்
நேரங்களில் சில தடவை...

என் தனிமையில் வாட்டும்
உன் நினைவில் பல தடவை...

செத்து கொண்டுதானடி
இருக்கிறேன் நான்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (12-Aug-15, 4:01 pm)
பார்வை : 376

மேலே