இது கூட காதல் தானோ

அன்பே...!!!

அன்று வகுப்பில் ரேடியோ அலைகள்
பாடம் எடுத்த போது கூட எங்கே நான்
அதை கவனித்தேன்....
உன்னை நினைத்து காதல் வலையை அல்லவா
பின்னலிட்டுக் கொண்டிருந்தேன்......!!!


உனக்காகவே பேருந்து நிறுத்தத்தில்
காத்து நிற்பேனே கண்ணே...
கால் வலியாலா அவதிப்படிருப்பேன் ...
காதல் வழியால் அல்லவா அவதியுற்றிருபேன்.....!!!

உன்னையும் சேர்த்து உன் சுண்டுவிரலையும்
ரசித்தவனடி நான்....!!!
வர்ணக் கலவையால் நகங்கள் அலங்கரித்திருக்குமே
அதுவும் கூட ஒரு கலையோ ???...!!!!

உன்னையே நினைத்துக் கொண்டு படுத்திருப்பதால்
தானோ என்னவோ ... கொசுக்கடி கூட
தென்றலென இனிக்கிறதடி....!!!!

உன் கண்கள் பார்த்த நாளிலிருந்தே
என் தூக்கத்தை மறந்து வெறும்
துக்கத்தையே சுமக்கிறேனே...!!!!

அன்று காதல் மொழி பேசிய தொலைபேசி
கூட இன்று தொல்லைபேசி ஆனதே
உன் குரல் கேட்காத போது....!!!!!

உனக்கு வேறு திருமணம் ஆனது தெரிந்தும்
இன்றும் ஆயிரம் முத்தங்கள் உன்
புகைப்படத்தில் பதிக்கிறேனே ஒருவேளை
இது கூட காதல் தானோ ?????

எழுதியவர் : பிரவின் ஷீஜா (13-Aug-15, 9:10 am)
பார்வை : 352

மேலே