நிலா பெண்ணே
நிலா பெண்ணே...!!
நீ என் கண்களில் விழுந்து
தொலைந்ததால் தானோ என்னவோ
தினமும் என்னை அழ வைக்கிறாய்....!!!
சூரியனை மேகம் தினமும்
தழுவி செல்வதைப் போல தான்
நீயும் என்னை தழுவி சென்றாய் அப்போது...!!!
காதல் தோல்வி கவிதைகளாய் வந்து
இதயத்தை உடைக்கிறாய் இப்போது...!!!
என் கண்கள் சொரியும் கண்ணீருக்கும்
கூட தெரிந்த என் காதல் உனக்கு
தெரியாமல் போனது தான் விதியின் சூட்சுமம்...!!!
தூண்டிலில் சிக்கி உயிருக்குப் போராடும்
மீனைப் போல நானும் காற்றில் அசையும்
உந்தன் தாவணியில் சிக்கித் தவிக்கிறேன்...!!!
பாறை மேல் விழுந்து சிதறிப் போகும்
மழைத் துளி போல என்னுள் விழுந்து
சிதறிப் போனாயே பெண்ணே...!!!
என் உயிர் கூட நீராவியாய் போகிறதே
அன்பே... உந்தன் கொலுசொலி எந்தன்
செவியில் சரசமீட்டும் போது....!!!
இப்போதும் நீ என்னை நினைகிறாயா
என்று தெரியாமல் உன்னுள் புதையுண்டு
கிடக்கிறேனே ... தீவின் நடுவில் தஞ்சம்
அடைந்ததாகவே நினைக்கிறேன் கண்ணே...!!!
உனக்காக நான் எழுதி கசக்கி எறியும்
காகிதங்கள் கூட எனக்காக கண்ணீர் சிந்தும்....
ஆனால் நீயோ என் கண்ணீரில் விழுந்து
எழுந்து நீந்தி செல்கிறாயே அழகே....
அது எப்படி.... ???