பணம்

பணம்
காற்றில் கரையும் கற்பூரம்
வெள்ளத்தில் சிக்கிய பணி மலை
எவ்வளவு இருந்தாலும் கரையும்….
அனைவரும் தேடும் ஒரு கடவுள்
கிடைத்தால்
மகிழ்ச்சியின் முதல் படி
கிடைக்காவிட்டால்
இன்பத்தின் இறுதி படி…….
பணம்
சண்டையின் ஆரம்பம்
சந்தோஷத்தின் முற்றுப்புள்ளி….
உலகத்தின்
சொர்க வாசல்
ஏழைகளின் ஏக்கம்
வாழ்கை என்னும் வாகனத்தை
ஓட்ட தேவைப்படும் எரிபொருள்
பணம்
இருந்தால்
சரித்திரம் படைக்கலாம்
இல்லையென்றால்
தரித்திரம் பிடிக்கும்
மக்கள் ஏமாற்றக் கற்றுக்கொண்டதற்க்கு முதல் காரணம்
பணம்…
பணம்…
அதிகமாய் சேர்ந்தால் ஆபத்து
அளவுக்கும் குறைந்தால் அவ மதிப்பு
அளவாக சேருங்கள்
ஆயுள் வரை வாழுங்கள்…..
இப்படிக்கு
இரா. பிரிதிவிராஜன்.