என் மனதிற்கு நீயே சொந்தம்

மர்மமான புன்னகையில்
இருவரின் மனதின்
பரிமாற்றங்களை
காட்டிக்கொடுக்கின்ற போதும்
வாய் விட்டு
சொல்ல முடியா
அனுபவமில்லாக் காதலிதுவே!
உன்னை எனக்கு பிடிக்கிறது
என்று பவித்திரமான
உன் பார்வை சொல்லிடவே !
உன்னிடம்
சொல்லிடவே தயக்கம்
மௌனமாக இருந்தாலும்
என் மனதிற்கு
நீயே சொந்தம்