என் உயிரானவளுக்கு - உதயா

வண்ண வண்ண பூக்களும்
மண்ணில் முட்டி மன்றாடுமடி
உன் புன்னகை பூவின் வசீகர
வாசனையை வரமாக கேட்டு ..

அசைந்தாடும் தென்றலும்
அழுது புரளுமடி
உன் மெல்லிய நடையை
கற்றுத்தர கேட்டு .....

அந்த வானத்து வெண்ணிலவும்
தவமாய் தவமிருக்குமடி
நீ பேரழகியாய் இருப்பதன்
இரகசியம் என்னவென கேட்டு ....

இசைப் பாடும் கானக்குயிலும்
உன்னிடம் பிச்சையெடுக்குமடி
உந்தன் அழகான குரல் இசையினை
கற்றுத்தர கேட்டு ...

மழைக்கால கரு மேகங்களும்
கண்ணீர் சிந்துமடி
உன் கூந்தலைப் போல்
கருமை நிறம் தனக்கு
இல்லையே என்று ....

உன் கூந்தலில்
கொஞ்சம் சுகம் காண
பட்டாம் பூச்சிகளும்
பிளாஸ்டிக் கிளிப்பாக
உருமாறியிருக்குமடி..

உன் கால் கொலுசு சத்தத்தில்
ஈரேழு உலகத்தின் ஜீவன்களும்
மதி மயக்கம் கொள்ளுமடி...

நீ என்மேல் கொண்ட
அன்பினைப் பார்த்து
காதலைப் பார்த்து
கடவுளும் வியந்து
பொறாமைக் கொள்வானடி ...

என்னவளே ..
என் உயிருக்கு உரிமைக்காரியே
என் ஆன்மாவிற்கு சொந்தக்காரியே
என் வாழ்விற்கு ஒளிவிளக்கே

பார் காணா அன்பு எல்லையே
என்னை ஆட்சி செய்யும் மகாராணியே
என் ஆனந்தத்தின் உச்சமே

இயற்கையும்
உன்னை கண்ணில் காண
தவம் கிடக்குமடி

வெயில்காலத்தில் மழைக்காலமும்
மழைக்காலத்தில் குளிர்காலமும்
குளிர்காலத்தில் மழைக்காலமும் வெயில்காலமும்
உன்னை தரிசிக்கவே போர் புரியுதடி

என்னை கவிஞ்சனாக்கிய கவிதையே
என்னை காவியம் படைக்க வைத்த
காவியத் தலைவியே என் காதலியே
என் கற்பனைக்கு உயிர் கொடுத்த கருவாச்சியே ...

நீ என்மேல் கொண்ட அன்பிற்கு
நான் என்ன நன்றிகடன் செய்வேனடி

நான் எத்துனை முறை பிறந்தாலும்
உனக்காகவே பிறப்பேனடி
உனக்காகவே இறப்பேனடி

என்றும் என்றென்றும்
உதயாவின் இராஜாங்க
பட்டத்து அரசி
நீ மட்டும்மடி

நான் உன்னை காதலித்தேன்
நான் உன்னை காதலிக்கிறேன்
நான் உன்னை காதலிப்பேன்

நம் பந்தம்
இப்பிறவி மட்டும் அல்ல
ஜென்மம் ஜென்மமாய்
தொடருமடி .....

எழுதியவர் : உதயா (12-Aug-15, 9:06 pm)
பார்வை : 266

மேலே