என்னவனுக்காய் காத்திருக்கிறேன்

என் அலைபேசியில் ஒலி எழும் போதெல்லாம் நீ தானோ?.....
என விளித்து பின் ஏமாறுகிறேன்
வாசல் தட்டப்படும் ஓசையெல்லாம் உன் வருகையின் எதிரொலி தானோ?....
என ஓடி களைக்கிறேன்
களிப்புடன் திரும்பும் எண்ணத்தில் தோற்று சிறு சிணுங்கலுடன் வந்தமர்கிறேன்
மழை பொழுதில் தேனீர் அருந்தையிலும் வெயில் பொழுதில் பனிக்கூழ் சுவைக்கயிலும்
உன் நினைவுகளுடனே என் மனம் போராடுகிறது
பேருந்தின் சாளர ஓர பயணத்தில் உன் அருகாமையை தேடி முகம் திருப்புகிறேன் உலகம் நோக்கி
கானல் நீரை எட்டிப்பிடிக்கும் நம் ஓட்டத்தில் என் கை விரல்கள்
உன் விரல்களுக்குள் செல்லும் முயற்சியில் தோற்கிறது
வினா ஒன்று கேட்டு விடை தேடும் சிறுமியாய் உன் முகம் தேடுகிறேன் என் நித்திரையில்
நாள்காட்டியில் நாட்கள் நகராத என தினம் தினம் கிழிக்கிறேன் என் சோக நாட்களை
களிப்புடன் என் நேரங்களை உன்னுடன் கழிக்க சேர்த்து வைக்க தொடங்கிவிட்டேன்....
எங்கோ ஒரு உலகத்தில் எனக்கான உன் என்ன ஓட்டத்தில்
நான் இருப்பேன் என்ற மகிழ்ச்சியில் காத்திருக்கிறேன்
என்னவனே என்றோ என் உலகத்தில் உனை நான் சேர்த்துவிட்டேன்
சிறுபொழுதும் தவறாது உனக்காக காத்திருப்பேன்....

எழுதியவர் : சத்யாதுரை (12-Aug-15, 9:25 pm)
பார்வை : 83

மேலே