நதியே வா

விண்ணிலும் அல்ல ........
மண்ணிலும் அல்ல .....

கல்லும் அல்ல .....
முள்ளும் அல்ல ......

கனவும் அல்ல ....
காதல் சொல்ல ....

பெண்ணே ! நீயும்
அருகே அல்ல ....

மலரும் அல்ல ....
மதுவும் அல்ல ....

சிறகும் அல்ல ...
சிறுமியும் அல்ல ...

உயிரும் அல்ல ..
உறவும் அல்ல ....

உலகை வெல்ல ....
பிரஜைகள் வாழ ....
மரங்கள் சிறக்க ....
மலைகளை துலக்க ...
மண் வளம் பெருக ..
பெருக்கெடுத்து வா ....!

நங்கையின் நதியே ......
உலகம் செழிக்க விரைந்து வா ...!

தரணி எங்கும் பொங்கி ஓட ..
உழவர்கள் உழைப்பின் களைப்பை போக்கி ...
நிலங்களில் பசுமையை நெஞ்சில் நாட்ட விரைந்து வா ......!

எழுதியவர் : சு.முத்து ராஜ குமார் (13-Aug-15, 5:02 pm)
பார்வை : 1722

மேலே