சொர்க்கம் மரங்களாலே சாத்தியம்

சொர்க்கம் மரங்களாலே சாத்தியம் !

அமைதி இழந்ததாய்
அனைத்து மனிதர்களும்
இந்த அவசரப்பட்ட
கால சூழலில் .

அவரவர்க்கு ஆயிரம் வேலைகள்
அவரவர்க்கு ஆயிரம் தேவைகள்
அவரவர் அவரவர் வழியில் -
ஆனால் அமைதி ?

சுயநல தேடலில்
பொதுநலம் புதைக்கபட்டதாய்
வீட்டை போற்றுவோருக்கு
நாட்டை பற்றி கவலை இல்லை .

அமைதியை விரும்புபவர்கள்
அமைதியை தேடுபவர்கள் என்று இருந்தும்
அதற்கான முயர்ச்சிகளே கேள்விக்குறியில் .

மாறுபட்ட , மாசுபட்ட உலகத்தில்
மனிதனின் நிம்மதி
மறுக்கப்பட்ட ஒன்றாகவே .

நாகரீக வாழ்க்கையின்
நரக வாழ்க்கையில்
மர கன்றுகளுக்கு பதில்
கட்டிடங்களே முளைக்க துவங்கி விட்டன .

பரவி கிடந்த பறவை இனங்கள்
துறவியாய் அலைந்து கொண்டிறிருக்கின்றன
கூடுகள் இல்லாமல் .

தாயை பிரிந்து தவித்து வாழும்
பிள்ளைகளைப்போல்
மரங்களை பிரிந்து
மண்ணும் ஏக்கத்தில் .

மறு சுழற்சிக்கு வாய்ப்பே இல்லாமல்
மரண குழிக்குள் மரங்கள் எல்லாம் -
பின் சொர்க்கம் எப்படி
சாத்தியமாகும் .

சொர்கம் என்பது
சூழலில்தான் கிடக்கிறது -
மரங்களின் ஆட்சியே
சொர்கத்தின் ஆதாரம் .

ஆம் , பசுமை போர்திய
பூமியில்தான் சொர்கத்தின்
சூழல் நிலைத்திருக்கிறது .

மிருகமும் பறவையும் மனிதனும்
இன்பமாய் வாழ்வதற்கு
மரங்களின் இணைப்பு அவசியமே .

காடுகளுக்குள் வீடுகள் இருந்த காலத்தில்
மனிதன் அமைதியை நோக்கி
எங்கும் பயணித்ததில்லை .

சொர்கம் சூழலில்தான் இருக்கிறது
என்பதனை ஆதிகால மனிதன்
அன்றே உணர்ந்திருக்கிறான் .

அதனால்தான் வீடும் , காடும் , வீதியும்
மரங்களின் ஆதிக்கத்தில் நிறைந்திருந்தன -
மக்களும் மகிழ்ச்சியில் நிலைத்து இருந்தனர் .

காலத்தின் தேவை அவசிய தேவை
ஆம் -
சொர்கம் தேவையா ?
அப்போ மரங்களின் மறு அவதாரம் அவசியம் .

மாற்று சிந்தனைகளே
மாற்றத்தை உருவாக்கும் -
சொர்கத்தை நேசிக்கும் நீங்கள்
மரங்களையும் நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள் -

பூமியில் சொர்கம் -
மரங்களால் மட்டுமே சாத்தியம் .
இதுவே சத்தியம் .

எழுதியவர் : வினாயகமுருகன் (14-Aug-15, 9:31 am)
பார்வை : 252

மேலே