அம்மாவின் நினைவுகள்

பத்து மாதம் சுமந்து
பத்திரமாய் பெற்றெடுத்து
பக்குவமாய் சோறு ஊட்டி
பண்பாய் வளர்த்தாய்.... ஐந்து
ஆண்டுகள் உன்னருகில் இருந்து விட்டு
ஆறாம் வயதில் அழுதுகொண்டே பள்ளிக்கு சென்றது
பதினாறு வயதில் பூப்படைந்தது உந்தன்
புன்னகையில் நான் வெட்கம் கொண்டது
கல்லூரிக்கு அனுப்பும் வேளையில் நீ
எந்தன் காதில் சினுங்கியது
"பாத்து போயிட்டு வாம்மா! பாவி பசங்க பார்வை உன் மிது படும்...
பார்வை கண்டு மயங்கி விடாதே! என்று நீ சொன்ன அத்தனையும் கண் முன்னே நினைவுகளாக! வேலை பார்த்துக்கொண்டே பழைய நினைவுகளில் உந்தன் மகள்.......