விடுதலைக்கு வித்திட்ட சில தமிழர்களுக்கான நினைவு கூறல்

அகிம்சா முறையில் மட்டும்
தனிந்திடவில்லை எங்கள் சுதந்திர தாகம்!

மக்கள் உள்ளத்தில் குமுறிகொண்டிருந்த
வலிகளுக்கு வார்த்தைகளில்
வடிவம் கொடுத்தான் பாரதி!

உருவம் பெற்ற வலிகளுக்கு
மேடையேறி பேச்சினால்
உயிர் கொடுத்தார் சுப்ரமணிய சிவா!

உயிர் பெற்ற உடலுக்கு
தமிழன்னையாய் மாறி
வீரப்பால் சொரிந்தாள் வேலு நாச்சியார்!

வீரப்பால் உண்ட
வேங்கையாய் ஆகி
வீறுகொண்டு எழுந்தான் கட்டபொம்மன்!

வீரத்தாயின் இன்னொரு புதல்வனாய்
எதிரியின் தலை கொய்து
பகடை ஆடினான் வாஞ்சிநாதன்!

என் தமிழ்நாடு கோட்டைக்கு
வாயிற்காப்பாளனாய்
திகழ்ந்தான் தீரன் சின்னமலை!

என் திருநாட்டின் தேசிய கொடி
தரை சாய விடாமல்
தன் தலை சாய்ந்தான் குமரன்!

இன்னும் எத்தனையோ ஆயிரம் பேர்
இன்னுயிர் குடித்து தான்
நாம் இன்று சுதந்திர பறவை ஆனோம்!
அத்தனை மாமனிதர்க்கும் இன்று
நாம் நன்றியை உரித்தாக்குவோம்!

வந்தே மாதிரம்!

எழுதியவர் : Narmatha (14-Aug-15, 7:04 pm)
பார்வை : 102

மேலே