காதல்பாட்டு
பொன்விலங்கு நீ அரும்பு நான் விரும்பும் பூவிலங்கு ,
காதல் ஒரு சித்தெறும்பு
கண்டம் விட்டு கண்டம் பயும் கட்டேறும்பு,
தேன் அருந்து நான் விருந்து தேகம் எல்லாம் தீ எறும்பு
நீயும்வந்து மொய் எழுது,
காயங்களை நீ விரும்பு காத்திருக்கு மெய் விருந்து
கட்டிலறை பக்கம் வந்து எதிர்பாத்திருக்கு கறு எறும்பு
கடிச்சா வலிக்காது வலிச்சாலும் சலிக்காது
கண்மணி நீ கரும்பு கலமேல்லாம் விரும்பு,
கரும்புக்கு வலிக்காது எறும்புக்குத்தான் வலிக்குமுன்னு
தோல் சீவி நறுக்கிவச்சேன் திகட்டாது என் விருந்து,
வண்ணபுள்ளி மானே வாடாது கரும்பு தோட்டம்
வாழையிலை விரிச்சுத்தானே விருந்தாக நீயும் வேணும்
இனிப்பா நீ இருக்கே எதுக்காக நான் இருக்கேன்
இன்னும் என்ன வேணும் என்னவளும்
தேனாகத்தான் இனிக்க,
என்னமோ போங்க என்னன்னமோ ஏக்கம்தாங்க
எண்ணமெல்லாம் நீங்கதாங்க என் நாளும் நீங்க வாங்க,
அடியே அழகென்ன அழகுன்னா உனை எண்ண
ஆசை தீர பின்னட்டுமா ஆடை போல நானும் உன்ன,
பின்னு பின்னு என்னை பின்னு சேலையில நூலு ஒன்னு
சிக்கிவிட்டா தவிக்கிறேன் சேலை ரேண்டா போகும்ன்னு,
சிரிச்சா செவ்வரளி சிக்குமான்னு உன்னை அள்ளி
சேத்துவச்சேன் நெஞ்சுக்குள்ள சிவந்தாயே நீ கள்ளி,
சிவக்கும் மருதாணி நீ தொட்டா எம்மேனி
கள்ளி கூட பூதானே காதலுன்னா தேன் தானே ,
பூமி நம்ம தாங்கும் என் தேகம் உன்னை தாங்கும்
என் நாளும் போவதில்லை
பின்னால உன்னை விட்டு,,,,written by:raj