சுதந்திர கீதம்
தென்றலுக்கு இன்று
புதியதோர் அனுபவம்
தேசீயக் கொடியுடன்
சுதந்திர உணர்வில்
பறந்திடும் ஆனந்தம் !
வீரர்களின் தோளில்
விளையாடி
வென்று மறைந்த வீரர்களின்
சங்கொலி அஞ்சலியில் முழங்கி
அமரர் ஜோதியில் ஆரத்தி எடுத்து
மலர் தூவும் மரியாதை தினம் !
தென்றலுக்கு இன்று உன்னத நாள்
பாரதம் முழுதும் பவனி வரும் நாள்
சுதந்திர கீதம் பாடித் திரியும் நாள் !
----கவின் சாரலன்