மனிதனும் ஒரு வகையில் இறைவனே
மழலை மூலம் மனிதனை
அடையாளம் காண்பது இறைவன்;
மனிதன் அடையும் அதிர்ஷ்டத்தில்
இறைவனை உணர்பவன் மனிதன்.
இறைவன் மனிதனை படைத்தான் மீண்டும் ஒரு
மனிதனை மனிதன் படைத்தான்
படைத்தல் தொழிலினால்
மனிதனும் ஒரு வகையில் இறைவனாகிறான்
ஆக்கல் காத்தல் பணியானால்
மனிதனும் இறைவனே எனில்
அழித்தல் பணியானால் ?