இசையின் உயிர்ப்பு

ஓர் இசைக்கான தேடலில்
வாத்தியங்கள் முழங்கிய
வாசல்கள் விட்டிறங்கி
சாலைவழி நடக்கையில்
சிறுமழையின் சிலிர்ப்பினில்
ஒதுங்கிய ஓர்மரத்தின்
ஒலித்த பறவையின் கீதங்கள்
மீட்டியது முதல்முறை
இசையின் உயிர்ப்பை...!
---------------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (16-Aug-15, 7:13 pm)
பார்வை : 1387

மேலே