திருமண மாலை

எனக்கு தெரிந்த
அத்தனை மொழியிலும்
உனக்கு வேண்டுதல் விடுத்துப் பார்த்துவிட்டேன்...
உனக்கு காதல் மொழி தவிர
அத்தனை மொழியும் தெரிந்துள்ளது...

என் கண் அசைவை தவிர
அனைத்தையும் புரிந்து கொள்ள
உன்னால் முடிகிறது...

எனது குறுஞ்செய்தி தவிர
மற்ற அனைத்து கடின
பதிப்புகளும் உனக்கு புரிகிறது...

இதற்கு மேல் உன்னுடன் போராட
என்னால் முடியாது...
கிடைத்தால் திருமண மாலை..
கிடைக்காவிட்டாலும் மாலைதான்
பிணவறையில்.....

எழுதியவர் : சாந்தி ராஜி (16-Aug-15, 10:24 pm)
Tanglish : thirumana maalai
பார்வை : 266

மேலே