இன்னும் கொஞ்சநாள்தான் அழபோறேன் 555
அன்பே...
உன் கொலுசு சப்தத்தோடு
ஸ்வரம் எட்டாகிறது...
எனக்கு மட்டும்
தனிமையில்...
உன் கொலுசிலிருந்து
உதிர்ந்த...
ஒற்றை முத்தை வைத்துகொண்டு
ஏங்குகிறேனடி நான்...
உன் பிரிவில் நான் விடும்
கண்ணீர்கூட...
உன் பெயரையே
எழுதுதடி...
வானம் முட்டி தலை
சாய்த்ததில்லையடி...
நட்சத்திரம் சிதறி மண்ணில்
பார்த்ததில்லையடி...
தினம் நிகழுதடி
என் வாழ்வில்...
நீ என்னை மறந்து
சென்றதால்...
சிதறும் நட்சத்திரம் போல்
நானும் சிதறி விடுவேன்...
இன்னும் கொஞ்ச நாளில்.....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
