கண்ணாடிக்கடல்
கண்ணாடிக்கடல்
==================================ருத்ரா இ.பரமசிவன்
கண்ணாடியின் எதிரே
முகம் தான்
பழிக்கும்
சுழிக்கும்
வலிப்பு காட்டும்.
இங்கே கண்ணாடி
எப்படி
இப்படி முகம் காட்டுவது?
தன் நீலவிழியில்
முத்தமிடும்
சூரியனால் ஏற்பட்ட
நெளியல்களால் ஏற்பட்ட கூச்சமா?
காலையின் நாணத்துக்கும்
மாலையின் மயக்கத்துக்கும்
அவன் தான்
"மெகந்தி" அலைகளை
செம்பஞ்சு தோய்த்து பூசவேண்டுமா?
கடலே
நீ அவன் கண்ணா(ட்)டி அல்லவா!
உன்னுள் அவன்
ஊடுருவினாலும்
நீ அவனை பிரதிபலித்தாலும்
வானத்தில் அதுவே நிலவு.
உன் வாழ்க்கை
ரசம் இல்லாததற்கு
நிலவாய்
ரசம் பூச வந்தவனே அவன்.
உன் சூறாவளிச்சுழியின்
அனக்கொண்டா
எதை முறுக்க
இங்கே தத்தளிக்கிறது?
இரவும் பகலும்
உன் இரு நாக்குகளாய் பிளவுபடும்
அந்தி மயக்கமே
இங்கு
அண்டமே விண்டுபோகும்
காதல் என்பது....
===============================================
தலைப்புக்கு (SEA OF GLASS)
அமெரிக்க கவிஞர் "எஸ்ரா பவுண்டு"(1885 1972)
அவர்களுக்கு நன்றி.
===============================================