நான்
நீ உருப்படமாட்ட என்றார் என் தந்தை
அருவெறுப்பு பார்வை பார்த்தான் தம்பி
ஒதுங்கி சென்றால் பாட்டி
கதறி நின்றால் தாய்.....
அவர்கள் கனவை என்னை சுமக்க சொல்கிறார்கள்
அவர்கள் தேவை நான் அறிவேன்
என் தேவை யார் அறிவார்.....
மக்கள் சேவை என் விருப்பம்
பணம் ஈட்டுவது அவர்கள் விருப்பம்
வெறும் பெயர் பலகையில் பொறிபதற்கு மட்டுமே
படிப்பு தேவை என்று நினைபவர்கள் அவர்கள்....
வாழ்கையின் பிறப்பிடமாக படிப்பை நினைப்பவள் நான்.....
கார் வாங்க முடியுமா உன் படிப்பில் என்கின்றனர்
வாழ்கை அறிய முடியும் என்கின்றேன் நான்
தன் சுயத்தையே நேசிக்க தெரியாதவர்கள்
என் நிஜத்தையா நேசிக்க போகிறார்கள்.......