நடிப்போடு பழகும் நட்பைவிடு
செய்ய கூடிய உதவியை ....
செய்ய முடியாததுபோல் ....
பாசாங்கு காட்டும் நட்பை ....
தொடராதே....!!!
நடிப்போடு பழகும் நட்பை ....
மெல்ல மெல்ல விலக்குவதே ....
அறிவுடைய ஒருவனின் ......
அற்புதமான செயலாகும் ....!!!
+
குறள் 818
+
தீ நட்பு,
+
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -38