கனவிலும் துன்பம் தரும்
சொல்வதொன்று ....
செய்வதொன்று ....
உள்ளொன்று ....
புறமொன்று .....
கொண்ட நப்பு ......!!!
இரு தலை பண்பை .....
கொண்ட நட்புகள் ....
நிஜத்தில் மட்டுமல்ல ....
கனவிலும் துன்பம் தரும் ....!!!
+
குறள் 819
+
தீ நட்பு,
+
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -39