உன்னை இழிவுபடுத்தும் நட்பு

உன்னோடு தனிமையில் ....
உயிராய் பழகுவதுபோல் .....
உயிரை கொடுத்து பழகிய ....
நப்பு ......!!!

கூட்டத்தின் நடுவே ....
உன்னை இழிவுபடுத்தும் ....
சொல்லையும் செயலையும் ....
செய்யுமாயின் -வேண்டாம் ...
அந்த நட்பு .....!!!
+
குறள் 820
+
தீ நட்பு,
+
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 40

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (18-Aug-15, 1:54 am)
பார்வை : 115

மேலே