பகை கொண்ட நட்பு மேல்
சிரித்து சிரித்து பழகும் ....
கெட்ட நட்பை காட்டிலும் ....
வெறுத்து வெறுத்து பேசும் ....
பகை கொண்ட நட்பு மேல் ....!!!
கெட்ட நட்பால் ....
சில நன்மைகள் கிடைப்பதை ....
காட்டிலும் - பகை நட்பால் ....
ஆயிரம் தீமைகள் வருவது ....
எவ்வளவோ மேல் .....!!!
+
குறள் 817
+
தீ நட்பு,
+
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -37