என் வாழ்வின் முகவரி உன்னிடமே 555
அன்பே...
இதயத்தின் கண்ணீரை காதலால்
மட்டுமே துடைக்க முடியும்...
நிசப்த வேளையில் வெயில்கால
காற்றோடு உரசும் மூங்கிலை போல்...
அடிக்கடி பற்றி கொள்கிறது
உன் நினைவு...
சோகமே அதிகம்
சம்பவித்த என்னுள்...
சிறு மாற்றமாய்
நீ இருக்கிறாய்...
நீயும் நானும் சந்திக்காமல்
இருந்திருந்தால்...
என் வாழ்வின் முகவரியை
கண்டுபிடித்திருக்க மாட்டேனடி.....