பேச தெரியாதவள் அவள்

மொழி புரியாத ஒரு பார்வை
மௌனத்தில் ஆயிரம் பேசுகிற கண்கள்
கட்டி வைத்தாலும்
என்னை தொட்டிடத்தான் எண்ணுகிறது
உன் கூந்தல்
அதை மீண்டும் சிறை பிடிக்கிற
உன் கைவிரல்கள்

காற்றோடு உன் தாவணி பேசும்
கால்கள் கூட தடுமாறும்
என் பார்வை படும் போது

வெக்கங்களை உள்ளடக்க தெரியாத
உன் முகத்தில்
வெடிக்கத்தான் செய்கிறது
உன் சிரிப்பு என்னும் மத்தாப்பூகளால்

அவள்ளோடு பேசுவதாக எண்ணி
உள்ளுக்குள் என்னை பற்றியே பேசுகிறாய்
பார்த்து பார்த்து
சிரிக்கவும் செய்கிறாய்

பார்வைக்கு தூது வைகிறாய்
தோழியை
பாக்கிறானா பாக்கிறானா என்று சொல்லி
ஒரு நொடிக்கு பலமுறை
திரும்பி திரும்பி என்னையே பார்க்கிறாய்

பகலில் என்னை தேடுகிறாய்
இரவினில் உன் கண்ணில் என்னை மூடுகிறாய்
கனவில் என்னோடு பாடுகிறாய்
எவரோடும் சிரித்தே பேசுகிறாய்

காதல் வந்ததால்
காயமும் ஆறிப்போனது
காதல் வந்ததால்
காலமும் இனிமையானது ...

எழுதியவர் : காந்தி (18-Aug-15, 3:37 pm)
பார்வை : 135

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே